ஆறுமுகன் தொண்டமானுக்கு தலைவர், பொதுச்செயலாளர் பதவிகள்

ஆறுமுகன் தொண்டமானுக்கு

இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் பதவியில் இருந்து முத்து சிவலிங்கம் விலகியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் பதவியையும் பொதுச்செயலாளராக ஆறுமகன் தொண்டமான் செயல்படுவரென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தொழில்நுட்ப கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இ.தொ.காவின் நிர்வாக சபையும் தேசிய சபையும் கூடியே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், முத்துசிவலிங்கத்துக்கு மருத்துவ பிரச்சினை காணப்படுகின்றமையால் தொண்டமான் தலைவராகவும் நிதிச்செயலாளராக ராமேஸ்வனும் நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]