ஆறிய கஞ்சி பழங்கஞ்சி – தமிழரசுக் கட்சி மீது குற்றம் சுமத்தும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா

தமிழர்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், அரசியல் பலமுள்ள தமிழரசு கட்சி, தமிழ் கட்சி சாராத பிரதிநிகளையும் இணைத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால், பிரதான பிரச்சினைகளான அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர்கள் தொடர்பான விடயங்களை தீர்க்க முடியும், ஆனால், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழரசுக் கட்சி ஈடுபடவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்று (15) நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முதல் 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்திற்குள் தீர்வு காணமுடியவில்லை எனில், ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிய பழமொழி போன்று ஆகிவிடும், ஆகையினால், முதல் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மிகப் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும்.

தேர்தலின் போது, இலங்கை தமிழரசு கட்சி பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆணை வழங்கினால் புதிய அரசிடம் இருந்து அனைத்தையும் வென்றெடுத்து தருவோம் என பல விடயங்களை முன்வைத்தார்கள். அதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் மிகப் பிரதானமானது. காணாமல் போனோரைக் கண்டறிதல் மற்றும் அதற்குரிய பரிகாரம் உட்பட காணி விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தார்கள்.

அதில் முன்வைத்த விடயங்களை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை. திருப்பதியாக எந்த விடயத்தினையும் இதுவரை தீர்த்த மாதிரியும் இல்லை. அந்தவகையில், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விடுவிக்க வேண்டுமாயின் அரசியல் பலம் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழரசு கட்சியில் போதிய அரசியல் பலம் உள்ளது.

அதேவேளை, தமிழரசு கட்சியைச் சாராத பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் பிரதிநிதிகளை ஒன்று சேர்த்து, அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், இந்தப் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கலாம். தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கூட தமக்குள் கலந்துரையாடுவதாக தெரியவில்லை.

ஓரிருவர், தான் ஜனாதிபதியுடனோ, அல்லது பிரதமருடனேயோ பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் உள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், ஆயுதப் போராடடத்திற்கு முடிவு காணப்பட்டு, இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.

வன்முறைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் தோற்கவில்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகள் தோற்கடிக்கப்படவில்லை. தவறான வழிமுறைகள் தோற்கடிக்கப்பட்டன என்பதே எமது நிலைப்பாடு.

நாடாளுமன்ற ஜனநாயக வழிமுறைகளுடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அதை அன்று மறுத்தே ஆயுத வன்முறை தொடர்ந்தது. ஏனைய தமிழ் கட்சிகள், விரும்பியோ விரும்பாமலோ அதை ஆதரித்து வந்த நிலைமைகள்.அதனூடாகத் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியுமென வன்முறையில் ஈடுபட்ட இயக்கத்தினைத் தவிர, அதனை ஆதரித்து வந்த இயக்கங்களின் நிலமையாக இருந்தது. இதுவே ஏக பிரதிநித்துவம், இதனூடாகவே பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்றும் கூறியிருந்தார்கள்.

தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்குக் சக தமிழ் தலைமைகளும், வன்முறையைத் தூண்டியவர்களும் காரணம்.யாழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. மக்களின் நலன்களில் இருந்துகொண்டு, வரலாற்று அநுபங்களின் ஊடாக சொல்கின்றேன். கட்சியின் தூண்டுதலுடன், பல்கலைக்கழக மாணவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் அந்த நடைபவணியில் காணப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சொன்னார்கள். சிறைச்சாலை வரை வந்திருக்கின்றோம். இனி நாடாளுமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டுமென சொன்னார்கள்.
ஆயுத வன்முறையைத் தொடர்ந்த புலிகள் இயக்கமும், புலிகள் இயக்கத்தனை ஆதரித்த சக இயக்க கட்சிகளோ, அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத நிலைமை இருந்துத.நாம் முன்வைத்த எமது நிலைப்பாட்டிற்கே இன்று அனைவரும் வந்துள்ளனர்.

ஆனால், துரதிஸ்டவசமாக எமது பொறிமுறைகளை நோக்கி அவர்களினால் வர முடியவில்லை. பொறிமுறைக்குள் வராதிருப்புத தான் தீராத பிரச்சினையாக உள்ளது. அநுராதபுரம் வரை சென்ற நடைபயணத்தின் பின்னணியில் இருந்த கட்சியின் பொதுச் செயலாளர், சிங்கள தரப்பினையும், தமிழ் தரப்பினையும் உசுப்பேத்தும் விதமாக 40 ஆயிரம் சவப்பெட்டிக்கு தயாராகுங்கள் என கூறிவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

அநுராதபுரத்தில் ஒரு விடயம் வெளிப்பட்டது. அநுராதபுரத்தில் உள்ள சிங்கள இளைஞர்கள் கூறினார்கள். விடுதலைப்புலிகளை விடுவியுங்கள் என கூறினால், விடுவிக்க முடீயாது, அரசியல் அணுகு முறையுடன் வந்தால், தாராளமாக வரலாம் என்றும், புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருந்தால் முன்னுக்கு வாருங்கள் விவாதிப்போம் என்ற போது, அந்தக் கட்சியின் செயலாளர் பம்மிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், அவரின் முதுகெழும்பு எங்க போனது, யார் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்பது மக்களுக்கே வெளிச்சம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]