ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றி! அதிமுக, திமுக அதிர்ச்சி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக இடைத் தேர்தல் ஒன்றில் சுயேச்சை வெற்றி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.பெற்ற வாக்குகள்

முதல் சுற்றின் வாக்கு எண்ணிக்கையில் தொடங்கி, இறுதி சுற்று வரை தினகரனே முன்னிலை பெற்று வெற்றிக் கனியை பறித்துள்ளார். தினகரனின் இந்த வெற்றி, ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai: AIADMK(Amma) Deputy General Secretary TTV Dinakaran addressing media at his residence in Chennai on Friday. PTI Photo(PTI8_4_2017_000195A)

ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின

பிற கட்சியினர் பெற்ற வாக்குகள்

பெற்ற வாக்குகள்

மதுசூதனன் ( அதிமுக ) : 48,306,
மருதுகணேஷ் ( திமுக ): 24,651,
கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,860,
கரு நாகராஜன் ( பாஜக ) : 1,417 வாக்குகளை பெற்றனர்.
இதில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நோட்டாவுக்கு விழுந்த 2373 வாக்குகளைவிட குறைவாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]