தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் சுமுகமான முறையில் விறுவிறுப்பாக வாக்களிப்பு நடைபெற்று வருகின்றன.

இன்று காலை 10 மணி வரையான வாக்களிப்பு நிலவரப்படி கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 30% வாக்குப்பதிவும், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 25% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 20% வாக்குப் பதிவும், வவுனியா மாவட்டத்தில் 40% வாக்குப் பதிவும் காலி மாவட்டத்தில் 19% வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுவதுடன், இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.