ஆர்யா மற்றும் ரஞ்சித் தொடங்கி வைத்த‘கின்டர் லா’

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பார்கள். சிறு வயது முதலே குழந்தைகள் தனக்கான ஒரு களத்தை தேர்ந்தேடுத்து செல்ல சிறந்த ஆசிரியர்களும், வழி காட்டுதல்களும் வேண்டும். சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்லே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை. இதன் சிறப்ப்மசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படையாய் கொண்டு குழந்தைகளை கற்பிப்பது.

பிரபல நடிகரும், சைக்கிள் வீரருமான ஆர்யா மற்றும் கபாலி பட இயக்குனர் ரஞ்சித் இதை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தனர். கலையரசன், நடன இயக்குனர் சதிஷ் என பல்வேறு துறை சேர்ந்தோர் இத்தொடக்க விழாவில்
பங்கேற்றனர்.

“ குழந்தைகளின்பால் அன்புகொண்டு அவர்களுக்கு துணையாகவும், நல்ல எடுத்ஹ்டு காட்டாகவும் விளங்கவல்ல சிறந்த ஆசிர்யர்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விளையாட்டு போக்கில் ஒரு கல்வி சுழல் என இன்றிய குழந்தைகளின் புரிதலுக்கேற்ப எங்களது பாட வழி முறைகள் அமைந்துள்ளன. விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தையும் தாண்டி நாட்டின் எதிர் காலத்தை உருவாகுகிறோம் என்பதில் பெருமிதமே” எனக் கூறுகின்றனர் கின்டர் லா நிறுவனர்கள் சுபிக்கா மற்றும் ப்ரியா கலையரசன்.