ஆரோக்கியம் மட்டுமன்றி சருமத்திற்கு அழகு தரும் பூசணிக்காய்

ஆரோக்கியம் மட்டுமன்றி சருமத்திற்கு அழகு தரும் பூசணிக்காய்

அழகுக்காக சில பொருட்களை நாம் வீட்டிலிருந்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்தவகையில், பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் சரும வளர்ச்சிக்கு புத்துணர்வூட்டும்.

பூசணிக்காயை துருவலாக்கி அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவரலாம்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 3 டேபிள்ஸ்பூன் பூசணி சாறுடன் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, தலா ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை கலந்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி வரலாம். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளிச் தோற்றத்தை பெறுவதற்கு பூசணி சாறுடன் தயிர், முட்டை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

ஒரு டேபிள்ஸ்பூன் பூசணிக்காய் சாறுடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிரை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை செய்துவந்தால் சருமம் அழகாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]