ஆரையம்பதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவலிங்கத்துறை கிராமம் வீட்டுத்திட்ட குடியிருப்பில் குடும்பஸ்தரான ஆணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை 16.06.2018 மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்ற செய்தி பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதுடன் சடலத்தையும் மீட்டனர்.

சம்பவத்தில் மாவிலங்கத்துறை வீட்டுத் திட்ட கிராமவாசியும் கூலித் தொழிலாளியுமான ஆறு பிள்ளைகளின் தந்தை எம். இலட்சுமணன் (வயது 43) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அயலவருடனான நீண்ட நாள் பகைமை காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கம் தாக்குதலாக மாறியுள்ளது.

இதன்போது மரம் சீவும் வாச்சிக் கருவியால் தாக்கப்பட்டதில் இவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆரையம்பதியில் ஆரையம்பதியில்

இதேவேளை, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் தப்பிசென்றுள்ள நிலையில் அவரைத் தேடும் தீவிர முய்றிசியில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]