சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின் The Show people நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் ஆரியா கேத்தரின் தெரஸா நடிக்கும்  கடம்பன்.

ஆரியா கேத்தரின் தெரஸா நடிக்கும் கடம்பன்

ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆரியா கேத்தரின் தெரஸா நடிக்கும் கடம்பன்

ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார்

இசை – யுவன்சங்கர் ராஜா

எடிட்டிங் – தேவ்

கலை – A.R.மோகன்

ஸ்டன்ட் – திலீப்சுப்ராயன்

பாடல்கள் – யுகபாரதி

நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி

இணைத் தயாரிப்பு – B.சுரேஷ் B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா

தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராகவா

படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் ….

கடம்பன் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது. ஆர்யா இப்படத்திற்காக தனது உடம்பை வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம். காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம் தான் கடம்பன். படம் இம்மாதம் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உலகமுழுவதும் வெளியாகிறது. மஞ்சப்பை படத்தை போலவே இந்த கடம்பனும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார் இயக்குனர் ராகவா.

ஆரியா கேத்தரின் தெரஸா நடிக்கும் கடம்பன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]