ஆரவ் பிறந்தநாளில் கலந்து கொண்ட ஓவியா – புகைப்படங்கள் உள்ளே

பிக்பாஸ் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஓவியா. இதில் ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

இவர்களில் ஓவியா பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்தார். நிகழ்ச்சியில், ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பழகிய விதம் பெரிதும் பேசப்பட்டது. இவர்களிடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியதாக கூறப்பட்டது.

தனது விருப்பத்தை ஆரவ்விடம் ஓவியா சொல்ல முயன்ற போது அதை அவர் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதனால் ஓவியாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆரவ்வை திட்டி தீர்த்தனர். பின்னர் தனது மனதை தேற்றிக் கொண்டஓவியா, ‘இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்’ என்று டுவிட்டரில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி காரணமாக ஓவியாவின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார். என்றாலும் ஓவியாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆரவ்வை விமர்சித்து வருகிறார்கள்.

ஆரவ் நடிக்கும் ஒரு படத்தில் ஓவியாவை ஜோடியாக நடிக்க அழைத்ததாகவும் ஆனால் ஓவியா மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரவ் – ஓவியா விலகி இருப்பதாகவே தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆரவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில், ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார்.

இதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். இதனால் ஆரவ் பிறந்த நாள் விழா கோலாகலமானது.

பழைய சம்பவங்களை மறந்து அனைவருடனும் கலகலப்பாக பேசிய ஓவியா, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதனால் பிக்பாஸ் நண்பர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

இந்த படங்களை கணேஷ் வெங்கட்ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆரவ்வுடன் ஓவியாவும் ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார்.

நடந்தவற்றை மறந்து ஆரவ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பாராட்டி உள்ளனர். ‘பழைய சம்பவத்தை மறந்து நேரில் வாழ்த்திய தேவதை’ என்று புகழ்ந்து வருகிறார்கள்.

ஆரவ் பிறந்த நாளில் ஓவியா கலந்து கொண்டு நேரில் வாழ்த்தியதால், இருவருக்கும் மீண்டும் காதல் அரும்பியதாக தகவல் பரவி வருகிறது. ஆரவ் போனில் பேசி ஓவியாவை சமாதானம் செய்ததால் தான் அவர் நேரில் சென்று வாழ்த்தினார் என்று கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் ஆரவ் பிறந்த நாளில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]