ஆரம்பமே அமர்களமான நாடாளுமன்றம்- சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த தரப்பினர்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்பே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுளனர்.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெருமவைக் கைது செய்ய வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது என்று,தினேஸ் குணவர்த்தன கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]