ஆரம்பமானது மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா

ஆரம்பமானது மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா

மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய “மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா” சனிக்கிழமை (22) பண்பாட்டு பவனியுடன் கோலாகலமாக ஆரம்பமானது.

மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பவனி மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகளுடன் கல்லடி முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி வரை சென்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா சனிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பேராசிரியர் சி.மௌனகுரு, பிரதேச செயலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது ஆரம்பமானது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]