முகப்பு News Local News ஆயித்தியமலையில் காட்டு யானை தாக்கி மீனவர் பலி

ஆயித்தியமலையில் காட்டு யானை தாக்கி மீனவர் பலி

மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மீனவரொருவர் உயிரிழந்துள்டளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (02) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆயித்தியமலை நெல்லூர் கிராமவாசியான சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான மாமாங்கம் சன்முகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் மாமாங்கம் அழகுதுரை அடையாளம் காட்டியுள்ளார்.

சம்பவ தினத்தில் நெல்லூர் பகுதியில் வேளாண்மையை துவம்சம் செய்த யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளயின் உதவியுடன் வெளியேற்ற முற்பட்ட வேளை யானைக் கூட்டத்தில் ஒரு யானை கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.

இந்த நேரம் கித்துள் குளத்தில் மீன்பிடி தொழிலுக்குச் சென்று மாலை 6.30 மணியழவில் வீடு திருப்பிய தையான மாமாங்கம் சன்முகராசாவை யானை தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுடலம் உடற்குற்றுப் பரிசோதனைகளுக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்டைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com