முகப்பு News Local News ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் இடையே நிபந்தனையுடனான போர்நிறுத்தம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் இடையே நிபந்தனையுடனான போர்நிறுத்தம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் இடையே நிபந்தனையுடனான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு, ஆப்கான் ஜனாதிபதி முகம்மது அஷ்ரஃப் கானி, தலிபானுடன் நிபந்தனையுடனான போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நாளை ஹஜ் பெருநாள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் 99வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மேலும், ‘ஆப்கானின் பல்வேறு சமுதாய பிரிவினர் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களுடனான விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும், ஆனால், எமது இந்த கோரிக்கைக்கு தலிபானியர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால், பின்னர் ஹஜ் பெருநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது’ எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த போர் நிறுத்த அறிவிப்பானது தலிபானியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐ.எஸ். போன்ற ஆயுதக் குழுக்களுக்கு இப்போர்நிறுத்தம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com