ஆப்கானிஸ்தான் பயணிகளை கடத்திய தலிபான் போராளிகள்

ஆப்கானிஸ்தான் பயணிகளை கடத்திய தலிபான் போராளிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில், 3 பேரூந்துகளில் பயணித்த சுமார் 150 பயணிகளே தலிபான் போராளிகளால் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்

குண்டுஸ் பகுதியில் தலிபான் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து இந்த கடத்தலை மேற்கொண்டதாக குறிபிட்டுள்ள தலிபான் போராளிகள், பின்னர் பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்கத்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பேருந்துகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் காபூல் நோக்கிய பெருந்தெருக்களில் பயணித்த போதே கடத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிபந்தனையற்ற போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகி ஒரே நாளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் ஏற்றுக்கொண்டால் நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறியிருந்த நிலையில், தலிபான் உறுப்பினர்கள் எவ்வாறான முடிவுடன் இருக்கிறார்கள் என்பது பற்றி தற்போது தெளிவற்ற தன்மை தோன்றியுள்ளதென அரசியல் அவதானிகள் குறிப்பிடுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]