முகப்பு News ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று (செவ்வாய்கிழமை) காலை இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிய ஜனாதிபதி உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போதே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை மூன்று மாதகால யுத்த நிறுத்ததிற்கு வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com