ஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மீது தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து இன்று (வியாழக்கிழமை) தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது, பாதி நிறைவடைந்த கட்டடமொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அத்தோடு குறித்த மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டுள்ள காபுல் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், குறித்த தாக்குதலில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கிரனைட்டுக்களும் வீசப்பட்டதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் இன்னும் கண்டறியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]