ஆப்கானிஸ்தானுடன் போராடி வென்ற பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானுடன் போராடி வென்ற பாகிஸ்தான்

ஆசியா கோப்பையின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று ஆரம்பித்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.

ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணியினர் சற்று நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

50 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 257 ஓட்டங்களைக் குவித்து 6 விக்கெட்டுக்களை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய ஷாஹிடி கடைசி வரை ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைக் குவித்தார். ஆப்கான் 67 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நவாஸ் 3 விக்கெட்டுக்களையும், ஷாஹ் அப்ரிடி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

258 வெற்றி இலக்கு என துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதலாவது ஒவரிலேயே முதல் விக்கெட்டினை இழந்தது.

பின்னர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 80 ஓட்டங்களையும், பாபர் அசாம் 67 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காது ஷோயிப் மாலிக் 41 ஓட்டங்களைக் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றி ஈட்டிக்கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷீத் கான் 3 விக்கெட்டுக்களையும் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக ஷோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டார்.

எதிர்வரும் 23ம் திகதி இந்தியா பாகிஸ்தான் அணியையும், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர் கொள்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]