ஆப்கானிஸ்தானில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு: இராணுவத்தினர் அதிரடி

ஆப்கானிஸ்தானில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு: இராணுவத்தினர் அதிரடி

ஆப்கானிஸ்தானில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

120 போர் விமானங்கள், பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் இது சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் இராணுவம் போராடி வருகிற நிலையில், ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]