முகப்பு News ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 33 பொதுமக்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 33 பொதுமக்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 33 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் மேலும் 60 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பயங்கரவாதிகள் மற்றும் படையினருக்கிடையில் அடிக்கடி அங்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், குறித்த போராட்டத்திலேயே பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com