ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீது தற்கொலைப்படை பயங்கரவாதியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நேற்று (செவ்வாய்கிழமை) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இடம்பெற்றுள்ளதோடு, இதில் 13பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இத்தாக்குதலில் 30இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 20-ஆம் திகதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது என்ற வேட்பாளர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தற்கொலைப்படை பயங்கரவாதியால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தானில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]