ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியடைந்து ஆசிய போட்டிகளிலிருந்து வெளியேறிய இலங்கையணி

ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியடைந்து ஆசிய போட்டிகளிலிருந்து வெளியேறிய இலங்கையணி

ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கையணி மோசமான ஆட்டத்தை வெளிப்பதியதன் மூலம் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் படுதோல்வியடைந்து ஆசியக்கிண்ண போட்டிகளிலிருந்து வெளியேறியது.

விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமான பந்துவீச்சு, பேட்டிங், களத்தடுப்பு தான் இலங்கையணியின் படு தோல்விக்குக் காரணம்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியினர் 50 ஓவர்களின் முடிவில் 249 ஓட்டங்களைக் குவித்தனர். அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களையும், இஹசனுல்லாஹ் 45 ஓட்டங்களையும், ஷாசாட் 34 ஓட்டங்களையும், ஹஷமதுஹல்லாஹ் 37 ஓட்டங்களையும் குவித்தனர்.

இலங்கையணியின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

250 ஓட்டங்களை இலக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கையணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கையணி 41.2 ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையணி சார்பில் தரங்க அதிகபட்சமாக 36 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான், நைப், நபி, ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இந்தத் தோல்வியுடன் இலங்கை ஆசியகோப்பையிலிருந்து வெளியேறியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]