ஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல்

கண்டித்த கமல்

ஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரவுவேளை அனைவரும் தூங்கும் வேளையில் மகத் பெண்களின் படுக்கை அறையில் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதற்கு பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பியுள்ளார்.

அதாவது அவர் தெரிவித்தது இங்கு எல்லை மீறிய சில வி‌ஷயங்கள் நடக்கின்றன. அதுபோன்ற விஷயங்கள் தொடரக் கூடாது. தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள். அது தப்பாகிவிடக்கூடாது என்றார்.

“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார் அனந்த் வைத்தியநாதன்.

இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.

பொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-

“பொன்னம்பலம் – அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில வி‌ஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.

நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]