ஆபரணங்களை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த 4பேரை எதிர்வரும் 3ம் திகதிவரையில் விளக்க மறியல்

ஆபரணங்களை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த 4பேரை எதிர்வரும் 3ம் திகதிவரையில் விளக்க மறியல்.

குடாநாட்டில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் தங்க ஆபரணங்களை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த 4பேரை எதிர்வரும் 3ம் திகதிவரையில் விளக்க மறியளில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

குடாநாட்டில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் தங்க ஆபரணங்களை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த 4பேரை எதிர்வரும் 3ம் திகதிவரையில் விளக்க மறியளில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். அதாவது பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் குறித்த குழுவினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் தங்க ஆபரணங்களை அபகரிப்பதாகவும் ஏனைய இருவரும் அம்முயற்சிற்கு துணைபுரிவதாகவும் குற்றம் சுமத்தியே மேற்படி நால்வரையும் பொலிசார் கைது செய்தனர். குறித்த நால்வரையும் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் பொலிசார் ஆயர் செய்தனர்.

குறித்த விடயத்தை ஆராய்ந்த நீதவான் நால்வரையும் எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்க மறியளில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]