ஆபத்தான பயணத்தை எதிர்கொள்ளும் திகிலிவட்டை மக்கள்

ஆபத்தான பயணத்தை எதிர்கொள்ளும் திகிலிவட்டை மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை செல்லும் ஆற்றைக் கடக்கும் படகுப் பாதை சில தினங்களாக இயங்காத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான பொது மக்கள் தினமும் இந்த பாதை ஊடாகவே பயணம் செய்கின்றனர்.

மழை காலங்களில் கிரான் – புலிபாந்தகல் வீதி வெள்ளத்தில் மூழ்கி தரைவழிப் போக்குவரத்து தடைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த இயந்திரப் படகுப் பாதையூடாகவே அதிகளவான மக்கள் பயணிக்கின்றனர்.திகிலிவட்டை மக்கள்

திகிலிவட்டை மக்கள்

திகிலிவட்டை மக்கள்

திகிலிவட்டை மக்கள்

திகிலிவட்டை மக்கள்

திகிலிவட்டை மக்கள்

சந்திவெளி கிராமத்திலிருந்து திகிலிவட்டை கிராத்துக்கு செல்வதற்கு சுமார் 300 மீற்றர் தூரம் ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. மழை காலங்களில் ஆறு பெருக்கெடுத்து சுமார் 500 மீற்றர் வரை கடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த காலங்களில் நீர்வழிப் போக்குவரத்துக்கு கோறளைப்பற்று பிரதேச சபையினால் இயந்திர பாதை பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த பாதை சில தினங்களாக இயங்காத நிலையில் தோணிகள் இரண்டினை இணைத்து சேவை இடம்பெறுகிறது.

திகிலிவட்டை அரச தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 வரை வகுப்புகள் காணப்படுவதால் அப்பிரதேசத்திலிருந்து இரண்டாம் நிலைக் கல்விக்காக நுற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த ஆற்றினைக் கடந்தது சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்துக்கு தோணியில்; செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இவர்களின் சீருடைகள் அழுக்கான நிலையிலும் பாதணிகள் அணிந்து செல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். குறித்த ஆற்றுப் பகுதியில் முதலை வாழ்வதால் தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

படகுப் பாதையின் இயந்திரம் பழுதடைந்துள்ளமை தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை நிருவாகத்தினரிடம் முறையிட்டபோதும் இதுவரை எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என திகிலிவட்டை மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

கோறளைப் பற்றுப் பிரதேச சபையினால் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரிடம் படகுப் பதை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலய நிருவாகம் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனையவர்களிடம் சேவைக் கட்டணம் அறவிடுகிறது. வாகனங்களுக்கும் தனியாக கட்டணங்கள் அறவிப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சாலி முகமட் சிஹாப்டீனிடம் கேட்ட போது

சந்திவெளி- திகிலிவட்டை கிராங்களுக்கிடையிலான இயந்திர படகுப் பாதையின் இயந்திரம் கடந்த சனிக்கிழமை பழுதடைந்துள்ளதாக எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு சேவையினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]