ஆபத்தான தலைவலியை அறிந்துக் கொள்ளுங்கள்…!

ஆபத்தான தலைவலியை அறிந்துக் கொள்ளுதல் மிக அவசியமான ஒன்றாகும். மனிதர்களுக்கு தலைவலிகள் வருவது சகஜம் தான். ஆனாலும் சில மனிதர்களினாலும் தலைவலிகள் வருகின்றது என சிலர் வேடிக்கையாக பேசுவர்.

இருப்பினும் பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆனால், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது.
அவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் கீழ் குறிப்பிடும் விடயங்கள் காரணங்களாக இருக்கக் கூடும்.

  • மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
  • சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
  • இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
  • மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
  • மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
  • தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
  • திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
  • மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்

மேற்கூறிய காரணிகளால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, சில தலைவலிகள் உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன என்று கூறப்படுகின்றது. இருப்பினும் தலைவலிக்கு விஷேட சிகிச்சைகள் அவசியமாகின்றன.

புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால் முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ( Altered Consciousness) தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின் காலையில் எழும் போதே தலையிடி இருத்தல், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின் பார்வையில் மாற்றம் ஏற்படின் ( குனியும் போது / வளையும் போது / இருமும் போது) உடனடி வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான நோய் அறிகுறிகள் தலைவலிக்கான அடிப்படைக் காரணி மடடுமல்லாது உயிராபத்தை விளைவிக்கவல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]