ஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்

ஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், ஆசிரியையிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட ஆசிரியர்

ஆனமடுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் இளம் ஆசிரியை ஒருவரை பலாத்காரமாக கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக சேட்டை புரிய முற்பட்ட ஆசிரியர் ஒருவர் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

29 வயதுடைய திருமணமாகாத ஆசிரியர் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 30 வயதுடைய திருமணம் முடித்த ஒருவர் என்று பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பலத்த மழை பெய்து கொண்டிருந்தமையால் பாடசாலை முடிவடைந்த பின்னர் குறித்த ஆசிரியை ஓய்வறையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களின் ஓய்வறைக்கு சென்ற குறித்த ஆசிரியர் “நீங்கள் எனக்கு பயமா” என்று ஆசிரியையிடம் கேட்டதற்கு “பயப்படுவதற்கு நீங்கள் என்ன பேயா” என்று ஆசிரியை பதிலுக்கு வினவியுள்ளார்.

இதன்போது அந்த ஆசிரியர் பெண் ஆசிரியையை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக சேட்டை புரிய முற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுத்த ஆனமடுவ கல்வி வலய அதிகாரிகள் குறித்த இரண்டு ஆசிரியர்களையும் இருவேறு பாடசாலைகளுக்கு இடமாற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுப்பதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]