ஆனமடுவையில் பெற்றோல் குண்டுவீசிய 7 சந்தேக நபர்கள் கைது

ஆனமடுவ நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(11) அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக உணவகம் பாரிய சேதமடைந்துள்ளது.

தீ வைத்து எரிக்கப்பட்ட உணவகத்துக்கு அருகில் காணப்படும் வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட சி.சி.டிவி கெமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

19 – 25 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவசரகால சட்டத்துக்கு அமைய அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]