ஆனந்த சுதாகரன் விடயத்தில் கருணை காட்டுமாறு வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜனாதிபதிடம் கோரிக்கை

ஆனந்த சுதாகரன்

வட மாகாணசபையின் 119வது அமர்வு இன்று (27) யாழ் கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயம் தொடர்பில் கருணை காட்டி பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையினை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என அவைத்தலைவர் சபையில் அறிவித்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட அனைத்து உறுப்பினர்களும், ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக வடமாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட விசேட பத்திரம் ஒன்றில் சகல உறுப்பினர்களும் கையெழுத்திட்டதுடன் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த சுதாகரன் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இருப்பதுடன், அவரது மனைவி அண்மையில் உயிரிழந்தமையினால் இரு பிள்ளைகளும் அநாதரவாக இருக்கின்றன். இரு பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு, ஆணந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த மனுவில் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட நீதியமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனந்த சுதாகரன் ஆனந்த சுதாகரன் ஆனந்த சுதாகரன் ஆனந்த சுதாகரன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]