ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பில் விடுதலை செய்யமுடியும்- எம்.சுமந்திரன் தெரிவிப்பு!!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அவரை விடுதலை செய்ய முடியாதென்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மதியம் (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்திற்கு விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை.

அனந்தசுதாகரனை ஜனாதிபதியால் விடுவிக்க முடியாது நீதிமன்றமே விடுவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம். ஆனந்தசுதாகரன் வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் தண்டனை அநுபவிக்கும் கைதி. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டுமே தான் விடுதலை செய்ய முடியும்.

குடந்த வாரம் ஜனாதிபதியுடன் நான் தொலைபேசியில் உரையாடிய போது, அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் மாற்றம் இல்லை என்பதே தனது நிலைப்பாடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உள்ள தடங்கல்களை விசாரித்த போது, அதில் உள்ள தடைகளைப் பற்றி தெரிவித்தார். ஜனாதிபதியினால் கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவையாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியைக் கொண்டு இவற்றினைச் செய்து முடிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் விதிவிலக்குக்கிடையாது. ஆகையினால், இவர்களின் விடுதலை தொடர்பாகவும் முன்னைய ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன்.

அரசாங்கத்தின் பிரச்சினைகள் தீர்ந்த பிறகு, இருந்தும் அரசாங்கத்தின் பிரச்சினைகள் இப்போது தீருமென தெரியாது, இல்லாவிட்டால், வெசாக் தினத்திற்கு முன்னர் முடிகின்றதோ தெரியவில்லை. ஆனாலும், வெசாக் தினம் முடிந்த பின்னர் தம்முடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]