ஆனந்த சமரசேகரவை கைது செய்யும் உத்தரவை பிறப்பிக்கவும்

ஆனந்த சமரசேகரவைகொழும்பு சிரேஸ்ட சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாஜூதீனின் கொலை தொடர்பில் பிரேத பரிசோதனையை நடத்திய ஆனந்த சமரசேகர, அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் நேற்று கோரியது.

இதனை கவனத்தில் எடுத்த கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான், ஆனந்த சமரசேகரவினால் தமது கைதுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதனையும் கருத்திற்கொண்டு உரிய உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]