ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை!!

தமிழ் அரசியற் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை உட்பட மதத்தலைவர்கள் மற்றும் கட்சி பேதமின்றி அரசியற் பிரமுகர்கள், இளைஞர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், கையொப்பமும் இட்டனர்.

அரசியற் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பில் இக்கையெழுத்து வேட்டை ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]