ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான சிக்கன் கிரேவி!

தேவையான பொருட்கள்

 • கோழி- 1/2 கிலோ
 • உப்பு- தேவைகேற்ப
 • பச்சை மிளகாய்-4
 • பிரிஞ்சி இலை- 1
 • பட்டை-1 இன்ச் துண்டு
 • ஏலக்காய்- 2
 • கிராம்பு- 2
 • கறிவேப்பிலை -2 கொத்து
 • மல்லித்தழை- 1/2 கப்
 • எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
 • மிளகு-1/2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
 • மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
 • தனியா தூள்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்
 • தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
 • முந்திரி பருப்பு- 15
 • வெங்காயம்-3 (நறுக்கியது)
 • சோம்பு- 1 டேபிள் ஸ்பூன்
 • கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்

செய்முறை :

 • முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலாதூள்,தயிர்,உப்பு சேர்த்து பிசிறி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
 • பின்னர் மிக்ஸ்சியில் முந்திரி பருப்பை அரைக்கவும்.பிறகு பச்சை மிளகாயுடன் மல்லித்தழை,சோம்பு,மிளகு சேர்த்து அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
 • வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து சிவப்பாகும் வரை வதக்கவும்.மேலும் அதனுடன் ஊற வைத்த கோழி துண்டுகளை போட்டு கிளறவும்.
 • கோழி முக்கால் பாகம் வேகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும்.தேவைகேற்ப அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து கிளறவும்.
 • கோழி பதமாக வெந்ததும் அரைத்த முந்திரி பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான கோழி கிரேவி ரெடி!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]