ஆண்டவரின் பிறந்தநாளில் விஸ்வரூபம் 2

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “விஸ்வரூபம் 2” .

Vishwaroopam 2

கடந்த 2013ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி வந்தது.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.

Vishwaroopam 2

சில தொழில்நுட்ப, சட்ட சிக்கல்களால் படத்தின் இரண்டாவது பாகம் உருவாவது இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் உலகநாயகன் நடிப்பில் “உத்தம வில்லன்”, “பாபநாசம்”, “தூங்காவனம்” உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியதுடன், அதைத் தொடர்ந்து “சபாஷ் நாயுடு” படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் கமல்.

Vishwaroopam 2

இந்நிலையில், “விஸ்வரூபம்-2” குறித்து எந்த தகவலும் வராத நிலையில், “விஸ்வரூபம் 2” படத்தின் மீதமுள்ள காட்சிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.

தற்பொழுது “விஸ்வரூபம்-2” படத்தின் டிரைலர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 7ம் திகதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Vishwaroopam 2

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருப்பதாகவும்,திரைப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஸ்வரூபம் முதலாம் பாகத்தில் நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

Vishwaroopam 2

உலகநாயகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல்” நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது.

“விஸ்வரூபம்-2” எதிரவரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]