ஆண்களை விட பெண்களே அதிக ரொமாண்டிக்கானவர்கள்

இல்லறத்தில் அதிகப்படியான காதல், கணவன் மனைவி உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

ஒருவரின் மீது ஒருவர் அக்கறை செலுத்துவது, அன்பு செலுத்துவது என அனைத்தையும் இந்த உறவில் மிகவும் சாதாரணமான ஒன்று. முற்காலத்தில் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட இருந்தது. இதிலிருந்தே கணவன் மனைவியின் அன்பின் இலக்கணம் அனைவர்க்கும் புரிய வைக்கும்.

ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள்.

ஆண்களை விட

உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது அல்லது ஊட்டிவிடுவது.

ஆண்களை விட

காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று கேட்பதில் தொடங்கி, மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.

டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக் மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும். ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார்.

ஆண்களை விட

என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]