ஆண்களைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத சில உண்மைகள்!

எப்படி பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது கடினமானதோ, அதேப் போல் ஆண்களைப் புரிந்து கொள்வது என்பதும் கடினமானது தான். அதிலும் காதலில் விழுந்த ஆண்களை என்றால், சொல்லவே வேண்டாம்.

ஆண்களின் நடவடிக்கைகள் அப்படியே மாறிவிடும். அந்த அளவில் காதல் ஒருவருக்குள் நுழைந்தால், அதற்கான அறிகுறிகளை ஆண்களிடம் தெள்ளத்தெளிவாக காட்டும். இக்கட்டுரையில் ஆண்களைப் பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மை #1

ஆண், பெண் இருபாலருமே காதலில் விழுவார்கள். ஆனால் யார் முதலில் அதை வெளிப்படுத்துவார்கள்? புதிய ஆய்வு ஒன்றில், காதலை முதலில் வெளிப்படுத்துவது ஆண்கள் தான் என தெரிய வந்துள்ளது.

உண்மை #2

ஒன்று தெரியுமா? அதிகமாக ஏமாற்றும் ஆண்களின் IQ அளவு குறைவாகத் தான் இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. IQ அளவு அதிகம் உள்ள ஆண்கள், எப்போதும் துணையை மதித்து நடத்துவதோடு, எப்போதாவது தான் ஏமாற்றுவார்கள்.

உண்மை #3

ஏன் எப்போதும் ஆண்கள் தன்னை கடந்து செல்லும் பெண்களை ஒருமாதிரி பார்க்கிறார்கள் என்று வியக்கிறீர்களா? ஆய்வு ஒன்றில், ஆண்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு வருடத்தை பெண்களைப் பார்க்கவே செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

உண்மை #4

மொட்டை அடித்திருக்கும் ஆண்கள் வலிமையானவராகவும், உயரமானவராகவும் காட்சியளிப்பர். அதேப் போல் தாடி வைத்துள்ள ஆண்கள் ஆண்மையுடனும், சக்தி வாய்ந்தவர்கள் போன்றும் காணப்படுவராம்.

உண்மை #5

பொதுவாக ஆண்கள் பெண்களை விட வேகமாக நடப்பார்கள். ஆனால் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாக இருந்தால், மெதுவாகத் தான் நடப்பார்களாம்.

உண்மை #6

ஆண்கள் தங்கள் வாழ்நாளில் காதலர் தினத்தைக் கொண்டாட செலவழிக்கும் பணம் மட்டும் திருமண நாளன்று செலவழிக்கும் பணத்தை விட அதிகமாக இருக்கும் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை #7

காதல் ஒரு அழகிற உணர்வு. பொதுவாக காதலில் விழுந்த ஆண்களின் உற்பத்தி திறன் குறைவாகவே இருக்குமாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]