ஆண்களே- இந்த ராசிக்கரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடியாம்- கொஞ்சம் தேடிதான் பாருங்களேன்!!

இந்த உலகத்தில் மிகவும் சுவாரஸ்யமான எவ்வளவோ விஷயங்கள் அன்றாட நாளில் நடந்து வருகிறது. அவற்றுள் என்றுமே இளமையானது ராசி பலன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ‘கும்ப ராசி நேயர்களே!’ எனும் குரல் கேட்டு ஓடி வரும் குடும்ப பெண்மணிகள் எத்தனையோ பேர்.

இருப்பினும், ஒரு சிலருக்கு இந்த ராசியினாலே கவலையும் ஏற்படும். காரணம், அன்று அவர்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிக்கை மணி அடிக்க, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் பத்து பொருத்தம் பக்காவாக இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் பெருமூச்சு விடுவர். இப்படி அன்றாட வாழ்வில் அனைவரையும் கவரும் ராசிபலனில் எந்த ராசிக்காரர் யாருடன் ஜோடி சேர வேண்டும்? இதனால் என்ன பலன் என என்றாவது நாம் யோசித்ததுண்டா! வாங்க ஜாலியாக படித்து பதிவை அறியலாம்.

1. தனுசு மற்றும் மேஷம்:
இந்த இரு ராசிக்காரர்கள் ஒன்று சேர்வதால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் எனும் தீ பற்றிக்கொள்ளக்கூடும். உனக்கு என்ன பிடிக்கும். எனக்கு என்ன பிடிக்குமென கேட்கமாட்டியா? போன்ற செல்ல சண்டையிட்டு, அவர்கள் இருவருக்கும் பிடித்த விஷயத்தை செய்ய எந்த ஒரு தடங்கலும் வருவதில்லை. இந்த இரு ராசிக்காரர்களும் சந்தோஷமாக வாழ புதுப்புது விஷயங்களால் ஈர்த்த வண்ணமும் காதல் நிரம்ப இருப்பர்.

2. ரிஷபம் மற்றும் கடகம்:
இந்த ராசி ஜோடிகள் எப்போதும் உணர்வு பூர்வமாக மனதளவில் பின்னி பிணைந்து காணப்படுவர். இதுவே அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலை ஏற்படுத்த வாழ்க்கையும் அழகாகிறது. அவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையுடன் மரியாதை தந்து வாழ, அவர்களுக்கு எனும் ஒரு இடத்தை வாழ்வில் பிடித்திட ஆசைப்படுவர். இதனால் இவர்கள் இருவர் வாழ்விலும் ஒளி மயமான எதிர்க்காலம் பிரகாசமாக மின்னவும் செய்கிறது.

Advertisement

3. மேஷம் மற்றும் கும்பம்:
இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜோடி சேர இதனால் எல்லையில்லா சந்தோஷத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளவும் செய்வர். இருவருமே ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஆதரவாக அவர்கள் வாழ்விலிருக்க, இதனால் இருவருடைய இலட்சியமும் நிறைவேறவும் உதவுகிறது. இதனால் வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டி காதலுணர்வுடன் வலம் வருவர்.

4. கும்பம் மற்றும் மிதுனம்:
எப்போதுமே கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வில் நீங்கா இன்பத்தை பெறவே விரும்புவர். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் நீங்கள் கும்பம் மற்றும் மிதுன ராசிக்காரராக இருந்தால் இனியும் என்ன கவலை. ஆம், இந்த இரு ராசிக்காரர்களுக்கு இடையேயான மன பரிமாற்றம் என்பது ஆழமான வகையில் அர்த்தமுள்ளதாய் அமைகிறது.

5. மீனம் மற்றும் கடகம்:
இந்த இரு ராசிக்காரர்களுக்கு இடையே அனுதாபம் என்பது அழகிய வாழ்வை அடித்தளமாக அமைத்து தர, இதனால் இருவருக்குள்ளும் நல்லதோர் புரிதலுணர்வு என்பது காணப்படுகிறது. இந்த இரு ராசிக்காரர்களும் எல்லா வித சந்தோஷ – கவலைகளை மனம் விட்டு பகிர்ந்துக்கொள்ள உண்மையாகவும் இருக்கின்றனர். இந்த எட்டு ஜோடி பொருத்தங்களில் நீங்கள் தான் வலிமையான ஒன்றும் கூட என்பதை அறிவீரா!

6. தனுசு மற்றும் சிம்மம்:
இந்த இரு ராசிக்காரர்களும் ஒருவருக்கொருவர் பிடித்த விஷயத்தை செய்ய, இதனால் வாழ்வில் புது ஆற்றல் ஒன்று கிடைக்கிறது. இருவருமே பிடித்த விஷயத்தை தன்னிச்சையாக செய்திட, இதனால் ஆச்சரியம் ததும்பும் ஒரு காதல் உணர்வு என்பது அந்த இடத்திலும் பிறக்கிறது.

7. மேஷம் மற்றும் மிதுனம்:
இந்த இரு ராசிக்காரர்கள் ஜோடி சேர, சின்ன சின்ன மன கஷ்டங்கள் வந்தாலும் அது நீண்டு வாக்குவாதமாக மாறாமல் இனிமையான முடிவை தருகிறது.

8. மேஷம் மற்றும் மகரம்:
நீங்கள் இருவரும் நடைமுறைக்கேற்ற வாழ்க்கையை வாழ, முதிர்ச்சியான மன நிலையை கொண்டு புரிதலுடன் விளங்குவீர்கள். மகர ராசிக்காரர்கள் ஆளுமை திறனுடன் காணப்பட விரும்பினாலும், அதை புரிந்துக்கொள்ளும் மேஷ ராசி நீங்கள், அவருக்கு பக்க பலமாக இருக்கவே விரும்புவீர்கள். எந்தவித பொறாமையும் உங்களுக்குள் இருக்கவும் இருக்காது.

எந்த ராசிக்கு எந்த ராசி ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை நான் சொல்லிவிட்டேன். நீங்கள் எந்த ராசி என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]