ஆண்களுக்கான இலகுவான அழகுகுறிப்புகள் சில….

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 20 அல்லது 30 இருக்கும், ஆனால் 50 வயது போன்று தோற்றமளிப்பார்கள்.அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லை.

ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும்.

பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களை செய்து தங்களுடைய இளமையை மேற்கொள்வார்கள்.

ஆனால், ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி, உணவுகளின் மூலம் இளமையைத் தக்க வைப்பது தான். ஆம், நாம் நமது இளமையை ஒருசில உணவுப் பொருட்களின் மூலம் தக்க வைக்க முடியும். அதற்கு சரியான உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரைக் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, இளமை தக்க வைக்கப்படும்.

குறைவான அளவில் குடித்தால், அது மிகுந்த சோர்வை உண்டாக்குவதோடு, உடல் சூட்டையும் அதிகரித்து, சரும செல்களை பாதிக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகளான முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவும்.

நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இப்படி உடலில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் இருந்தாலே, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]