ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்- மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்

மலட்டுத்தன்மை என்பது பெண்களில் மட்டும் ஏற்படும் ஒரு விஷயமாக அக்காலம் முதல் இந்த இருபதாம் நூற்றாண்டு வரை நம்பப் ஆட்டு வருகிறது; ஆனால், அறிவியல் ரீதியான உண்மையில், பெண்களில் மட்டும் அல்லாமல் ஆண்களின் உடலில் கூட மலட்டுத்தன்மை ஏற்படலாம். குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்கள் மட்டுமே முழு காரணமாக மாட்டார்கள்.

அவர்தம் கணவர்களின் உடலில் கூட பிரச்சனைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது!

மலட்டு தன்மைக்கு காரணம்!
ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் மலட்டு தன்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன; அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில், வாழ்க்கை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மலட்டு தன்மைக்கான காரணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடலாம்; சில விஷயங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்கும் மலட்டு தன்மையை உருவாக்கும் காரணிகள் என்ன என்று பார்த்தால், ஹார்மோன் குறைபாடு, வயது மற்றும் உணவு மற்றும் பழக்க வழக்க முறைகள்.

வீட்டு வைத்தியங்கள்!
ஆண், பெண் இருபாலரின் உடல்களில் இந்த மலட்டு தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும் வேறுபட்ட முக்கிய காரணிகள் என்னென்ன என்று பார்த்தால், பெண்களில் ப்ரோலாக்டின் ஹார்மோன் அதிகரிப்பு, பாலி சிஸ்டிக் ஓவரி சின்ரோம் போன்ற சில காரணிகளும், ஆண்களில் வெரிகோஸ் நோய், எஜாகுலேஷனில் பிரச்சனை, ஆன்டி ஸ்பெர்ம் மருந்துகள் பிறப்புறுப்பில் இருத்தல் போன்ற காரணிகளும் தான்.

இந்த பதிப்பில், ஆண்களின் உடலில் ஏற்பட்ட மலட்டு தன்மையை விரைவில் குணமாக்க உதவும், ஆண்களின் உடலில் மலட்டு தன்மையை ஏற்படா வண்ணம் காக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள் பற்றி படித்து அறியலாம்!

மாதுளம் பழம்!
மாதுளம் பழத்தில் குழந்தை பிறப்பை, கருவுறுதலை ஊக்குவிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மாதுளையை கருத்தரிக்க விரும்பும் ஆண்களும், பெண்களும் தொடர்ந்து உண்டு வந்தால், கட்டாயம் குழந்தை பிறப்பு விரைவில் நடைபெறும். இந்த மாதுளம் பழத்தை அப்படியே பழமாகவோ அல்லது உதிர்த்து பழச்சாறு தயாரித்தோ உட்கொண்டு வருதல் நல்லது. இதை தினசரி உண்டு வருதல் உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்; கருத்தரிப்பு நிகழ்விற்கும் உதவும்.

பெருஞ்சீரகம் – வெண்ணெய்!
பெருஞ்சீரகத்தை வெண்ணெய் சேர்த்து, உட்கொண்டு வருவது குழந்தை பிறப்புக்கு உதவும்; ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், பெண்களின் கருப்பையை பலப்படுத்தவும் உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஆண்கள் தங்கள் தினசரி உணவில் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பெருஞ்சீரகமும் வெண்ணெயும் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

படிகாரம்!
வெண்மை நிற படிகாரம் ஆண்களின் மலட்டு தன்மையை அடியோடு அழிக்க பெரிதும் உதவுகிறது; படிகாரத்தை வெண்மை நிற துணியில் கட்டி வைத்துக் கொண்டு, அதை இரவு உறங்கும் பொழுது பிறப்புறுப்பு பகுதியில் வைத்துக் கொண்டு உறங்க வேண்டும்; காலையில் அந்த துணியை எடுத்து பார்த்தால் அதில் ஒரு வெண்மை நிற படலம் படிந்து காணப்படும். இந்த படலம் ஏற்படாத வரை இந்த செய்முறையை மீண்டும் மீண்டும் செய்து வருதல் வேண்டும். இது மலட்டு தன்மையை முற்றிலும் குணப்படுத்த உதவும்.

பேரீட்சை!
பேரீச்சம் பழத்தில் அதிக சத்துக்கள் அடங்கி இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே! இந்த பழத்தை ஆண்கள் தினசரி எடுத்து கொண்டால், அவர்களில் ஆண்மை மற்றும் குழந்தை ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை பாலில் போட்டு உட்கொண்டு வரலாம் அல்லது அப்படியே கூட உண்டு வரலாம்.

ஒமேகா 3 மற்றும் டிஹெய்ச்ஏ
ஒமேகா 3 மற்றும் டிஹெய்ச்ஏ சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை பற்றி அறிந்து, அந்த உணவுகள் ஆண்களின் தினசரி உணவு முறையில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளை தொடர்ந்து உண்டு வருதல், ஆணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்ய உதவும்; மேலும் இந்த குறைபாடுகள் பிற்காலத்தில் மீண்டும் ஏற்பட வண்ணம் பார்த்துக் கொள்ள உதவும்.

போலிக் அமிலம்!
ஆண்களின் உடலில் கருவுறுதல் குறித்த எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக போலிக் அமில சத்துக்கள் மிகவும் அவசியம்; இந்த சத்துக்கள் அடங்கிய உணவினை ஆண்கள் தங்களின் அன்றாட உணவில் சேர்த்து, உண்டு வருதல் மிக மிக அவசியம். இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், கருத்தரிப்பு நிகழவும் உதவும்.

அஸ்வகந்தா!
அனைவரும் அறிந்த ஒன்று தான் அஸ்வகந்தா! இது ஆண்களின் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை அளித்து, அவர்தம் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. ஆகையால், ஆண்கள் இந்த அஸ்வகந்தாவினை உட்கொண்டு வருதல் மிகவும் நல்லது.

ராஸ்பெரி இலைகள்!
ஆண்கள் தங்களின் ஆண்மை குறைவு மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை போக்க, ராஸ்பெரி இலைகளை பயன்படுத்தலாம். இந்த இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீரை பருகி வருவது நல்ல ஒரு பலனை அளிக்கும். இந்த இலைகளால் விரைவில் பலன் கிடைக்கும்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை கொண்டு தயாரித்த பொடி அல்லது உணவில் சேர்க்கப்பட்ட பட்டையை ஆண்கள் உட்கொள்ள வேண்டும்; இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், அவர்களின் பாலியல் உணர்வுகளை மேம்படுத்தவும் உதவும். ஆண்கள் இதை வாரத்தில் 3 முறை அல்லது தினந்தோறும் கூட உண்டு வரலாம்.

ராயல் ஜெல்லி!
ராயல் ஜெல்லி என்பது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், அவர்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வினில் கண்டு அறியப்பட்டு உள்ளது; ஆகவே ஆண்கள் இதை பயன்படுத்துதல் நல்லது.

எந்தவொரு பொருளை பயன்படுத்தும் முன்னரும், நீங்கள் பயன்படுத்தப் போகும் பொருளால், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாதா என்று ஒரு முறை மருத்துவரிடம் சோதித்து விட்டு, பின் எடுத்துக் கொள்ளவும்.!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]