ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

ஆணைக்குழு அறிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடி உள்ளிட்டவை குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, இந்த சிறப்பு அமர்வுக்காக நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டவுள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விவாதம், மாலை 4 மணி வரை தொடரும் என்றும், அதன் பின்னர் நாடாளுமன்றம் பெப்ரவரி 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 20ஆம் , 21ஆம் திகதிகளிலும் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதால் இன்றைய அமர்வில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனோ கணேசனின் கட்சியும் அறிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]