ஆட்சியமைக்க எமது ஆதரவு தேவை – இராதாகிருஸ்ணன்

இராதாகிருஸ்ணன்

“ ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை புதிதாக ஆட்சியமைக்க வேண்டுமென்றால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்களின் ஆதரவும் அவர்களுக்கு தேவை” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் தனி அரசாங்கம் அமைய போவதாக இரு கட்சி சார்பிலும் பேசப்படுகின்றது. இரு கட்சி தலைவர்களும் தனியாக அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் தனி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், எமது உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். இவ்வாறான நிலையில் நாம் சக்தியுடையவர்களாக இருக்கின்றோம்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]