ஆடை இன்றி நிர்வாணமாக விமானம் ஏற வந்த பயணியால் பரபரப்பு- அதிர்ச்சி வீடியோ உள்ளே

நீண்ட தூர பயணத்தில் சலுப்பு தெரியாமல் இருக்க வேடிக்கை செய்து செல்வதுண்டு, ஆனால் இங்கு ஒரு நபர் பயணத்தை துவங்குவதற்கு முன்பே வேடிக்கை செய்துள்ளார். ஆனால் சற்று வித்தியாசமாக…

சமீப காலமாக விமான நிலையங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நிகழ்ந்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் சமீபத்தில் சவுதியில் தாய் ஒருவர் அவசரத்தில் தனது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விமானம் ஏறினார்.

பாகிஸ்தான் விமான நிலையத்தில் ஒருவர், தனது விமானம் தாமதமாக வந்ததால் ஆத்திரத்தில் தனது உடைமைகளை விமான நிலையத்திலேயே வைத்து தீ மூட்டினார்.

அந்த வகையில் தற்போது ரஸ்யாவை சேர்ந்த ஆண் ஒருவர், ஆடை இன்றி நிர்வாணமாக விமானம் ஏற விமான நிலையம் வந்துள்ளார். ரஸ்யாவின் டொமோடிவோ விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

காவல்துறை விசாரணையில் இவர் ரஸ்யாவின் யக்குஸ்தா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவத்தின் போது குற்றம்சாட்டப்பட்ட நபர் மது வஸ்து ஏதும் பயன்படுத்தவில்லை எனவும், சுயநினைவுடன் தான் இந்த காரியத்தில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் விமான நிலைய காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]