”ஆசைவார்த்தை கூறி பெண்களை மலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடுவார்” கணவன் குறித்து மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

பெண் ஒருவர் காணமல் போன வழக்கில் கைதான சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர்  குட்டியம்மாள். கடந்த வாரம் ஆடு மேய்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு திரும்பாதமையால் ,  இவரது மகன் கார்த்திக் தேடியுள்ளார்.

இதன் போது கிராமத்தில் இருந்தவர்கள் குட்டியம்மாள் கடைசியாக அங்கிருக்கும் தேவந்திரன் என்பவருடன் சென்றதாக கூறியுள்ளனர். இதனால் தேவேந்திரனை தேடி சென்ற கார்த்திக்கிடம் தேவந்திரனின் மனைவி, என்னுடைய கணவர் பல பெண்களை ஆசைவார்த்தை கூறி அவர்களை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை காட்டியுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன சுமதி என்ற பெண்ணை அவரது கணவர் எப்படி கொலை செய்கிறார் என்று இருந்துள்ளது. இதனால் பயத்தில் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன சுமதிக்கும், எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் நான் அவளுடன் நெருக்கமாக இருந்தேன்.

ஆனால் இது என் மனைவிக்கு தெரிந்துவிட்டதால், அவள் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள், இதனால் நான் சுமதியை மலையின் உச்சி பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தேன்.

அதை அவள் நம்பாத காரணத்தினால் வீடியோ எடுத்து எப்படி கொலை செய்தேன் என்று அனுப்பினேன். அதே போன்று தான் குட்டியம்மாளுடன் இருந்த பழக்கமும் மனைவிக்கு தெரிந்துவிட்டதால் அதே பகுதியில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அங்கு சென்று பார்த்த போது குட்டியம்மாளின் உடல் அழுகிய நிலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சுமதியின் எலும்புகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு பேர் மட்டும் தானா, அல்லது வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பொலிசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]