புதிய யாப்பு உருவாக்கத்திற்க்கு ஆதரவளிக்க வேண்டும் – பேராயர் ஆசிரி பெரேரா

புதிய யாப்பு முறையை எதிர்பவர்கள் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளுக்கு முரணாக செயல்படுகின்றனர் என்பதனை உணரவேண்டும். நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து அனைவரும் புதிய யாப்பு உருவாக்கத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று இலங்கை மெதடிஸ்தத திருச்சபையின் பேராயர் ஆசிரி பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய யாப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015 ஆண்டு தேர்தல் வாக்கெடுப்பில் தெரிந்தெடுக்கபட்டதான அடிப்படை நோக்கத்தை தெளிவான, மக்கள் ஆணையை பெற்ற அரசு பலவிதமான அரசியல், மதசார்பானவர்களின் நெருக்கடிகள் மத்திலும் புதிய யாப்பு ஒன்றை வரைய தொடர்ந்து எடுக்கும், அரசுசார்பான அனைத்து அரசியல் கட்சிகளினதும் விடாமுயற்சியை குறித்து இலங்கை மெதடிஸ்த திருச்சபை தனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.

அதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ (47%) வாக்குகளையும், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன (51%) வாக்குகளையும் பெற்றிருந்தனர். தாம் 2015 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் புதிய யாப்பு ஒன்றை முன்வைப்பதாக உறுதியளித்தனர். இதனை சரிவர சிந்திப்பின் இலங்கையில் புதிய யாப்பு ஒன்றை உருவாக்க 98மூ வீதமான மக்கள் 2015 ஜனவரி 8ம் திகதி வாக்களித்தனர் என புரிந்துக்கொள்ள வேண்டும்.

தற்போது புதிய யாப்பு முறையை எதிர்பவர்கள் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளுக்கு முரணாக செயல்படுகின்றனர் என்பதனை உணரவேண்டும். இதனால் இவ்யாப்பு உருவாக்கத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கும் நபர்கள், குழுக்கள் இவ்வித செயல்பாட்டை கைவிட்டு, இலங்கையில் அனைத்து மக்களின் அபிலாசைகளை உள்வாங்கும் புதிய யாப்பு உருவாக்க ஏற்படும் வேற்றுமைகள், இணக்கப்பாடு அற்ற நிலைகள் ஏற்படினும் அவைகள் மத்தியில் சுமூகமாக செயல்பட பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆனாலும் இவைகளை குறித்து தகுந்த இடங்களில் விவாதித்து செயல்பட வேண்டுமேயன்றி தகாத சுலோகங்களை பாவித்து, கோ~ம் எழுப்பி மக்களை வீதிகளுக்கு இழுத்து வருவதும், அவர்களை குழப்புவதும் முறையற்றது.

எனவே இலங்கை மெதடிஸ்த திருச்சபை முறையான விவாதத்திலும், கலந்துரையாடல்களிலும் ஈடுபடவும், நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படுத்திய சம்பவங்கள் மீண்டும் ஏற்படாவண்ணம் தவிர்க்கவும், ஏற்ற தீர்வு காணவும் அதற்கு ஏற்ற யாப்பு உருவாக்கப்படவும் செயல்பட அனைத்து நாட்டு மக்களையும் அழைப்பதோடு, சிறப்பாக கிறிஸ்தவர்கள் இதற்காக செபிக்கும்படியாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

கடவுளின் அமைதி அனைத்து மனித புரிந்துக்கொள்ளுதலையும் கடந்து இலங்கையர்கள் மேலும் தங்கியிருப்பதாக என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]