ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சிகலாசாலைகளுக்கு உள்வாங்கும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் 3 ஆம் திகதி மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. கடிதம் கிடைத்த ஆசிரிய உதவியாளர்களை இதற்கு சமூகமளிக்கின்ற போது உரிய ஆவணங்களைக் கொண்டுச் செல்லுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உதவி ஆசிரியர்களாக தற்பொழுது கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இந்த நேர்முகத் தேர்விற்காக கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் தாங்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்விற்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள்.
கடிதம் கிடைக்கப்பெற்ற ஆசிரிய உதவிளார்கள். பாடசாலை அதிபர்,வலய கல்விப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடைய விடுவிப்புக் கடிதங்களுடன் உங்களுடைய கடிதத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கொண்டுசெல்ல வேண்டும்.ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்க முடியாதவர்கள் இந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்கப்பட மாட்டார்கள். எனவே, அவ்வாறனவர்கள் சிபாரிசு செய்யுமாறு அமைச்சிற்கு வருவதில் எந்தவிதமான பயனும் இல்லை. உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
மேலும் ஆசிரிய பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதம் அனுப்பப்படாத அனைவருக்கும் கல்வி அமைச்சின் மூலமாக தொலைக்கல்விப் பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தப் பயிற்கள் அனைத்தும் தாங்களுடைய பிரதேசங்களிலேயே வழங்கப்படவுள்ளது.இதன்மூலம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உங்குளடைய நலனையும் கருத்தில் கொண்டு இந்த தொலைக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
சம்பங்தப்பட்டவர்கள் எமது கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் விண்ணப்பபடிவங்களைப் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்கப்படுகின்றார்கள். இந்தத் தகவல்களை உங்களுடைய சக ஆசிரிய உதவியாளாகளுக்கும் பெற்றுக்கொடுத்து அவர்களை உரியமுறையில் விண்ணப்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]