50ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் 50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களை
கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம்

ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக்காக வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர்களாக 3 ஆயிரத்து 850 பேரை பயிற்றுவித்து சேவையில் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக்கருவிற்கு உட்பட்ட திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் கூறினார். இதற்காக 700 பாடசாலைகளில் பௌதீக வளங்கள் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை பாடசாலைக்கு உட்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படுவுள்ளதாகவும் கல்வி அமைச்சர், 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது கூறியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]