ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுகள் நடத்தியதன் விளைவாக கொடுப்பவை 4000 ரூபாவால் அதிகரித்து விரைவில் 10, 000 ரூபாவை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன தெரிவித்தபார்.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்கபடவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட விமர்சனங்களை முன் வைத்தனர். இது கிடைக்குமா கிடைக்காதா பேசிக்கிட்டு தான் போறிங்க ஒன்றுமே செய்யவில்லை என்று கூறினார்கள்.

ஆனால், இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றதும் யாவரும் அறிந்த விடயம். அதன் படி நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கரமகிங்கவை தமிழ் முற்போக்குக் கூட்டனி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இந்தத் தீர்மானம் எடுக்கபட்டது. இதன்போது அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்சி.

இந்த பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கும் 6, 000 ரூபாவுடன் மேலும் அதிகரிக்கபட வேண்டுமென நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமவால் பாராளுமன்றத்தில் 2016/உஈ/உ/17 இலக்கம் கொண்ட அமைச்சரைவ பத்திரம் ஒன்று 2016.05.13 அன்று சமர்பிக்கபட்டது.

இந்த அமைச்சவை பத்திரம் தமிழ், சிங்கள, ஆங்கில் மொழிகளில் 75 பக்கங்ளை கொண்டதாகும். பெரும்பாலான பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கபட்டது. இதன் பின்னர் இதற்கு அமைச்கவை அங்கிகாரமும் நிதி அமைச்சின் அங்கிகாரமும் கிடைத்து பாராளுமன்ற அமைச்சரவை உப குழுவின் அங்கிகாரத்திற்காக விடப்பட்டிருந்தது.

அதனையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி துரிதபடுத்தி பெருந்தோட்டட ஆசிரியர் உதவியாளர்களுக்கானக் கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிக்கபட்டுள்ளது.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கை நிறைவேறி உள்ள நிலையில் சிலர் தங்களது மூக்குகளை நுழைத்துக் கொள்ள வேண்டாம். இவர்களுக்கு தற்போது ஆசிரியர் பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது. அவை முடிந்ததும் ஆசிரியர் தரத்திற்கான முழுமையான சம்பளம் வழங்கப்படும்.
தற்போது இவர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா ஒரு தற்காலிக கொடுப்பனவே. தற்போது ஆசிரியர் பயிற்சியில் உள்ளவர்களுக்கும் இனி ஆசிரியர் பயிற்சிகளுக்கு உள்வாங்க இருப்பவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு ஒரு உதவியாக இருக்குமென கருதுகின்றேன்.

அந்த வகையில் இந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நான் எடுத்த முயற்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தும் கொள்கின்றேன். இந்த பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களை வைத்துக்கொண்டு மலையகத்தில் பல்வேறு நாடகங்கள் அரங்கேருகின்றன.

அது கல்வித்துறைக்கு அவ்வளவு நல்லதல்ல. நானும் ஒரு அரசியல்வாதிதான் ஆனால், கல்வியில் அரசில் நாடகங்களை நடத்துவதில்லை. பொய் அறிக்கைகள் விடுவதில்லை. என்னால் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன். அவை வெற்றி பெற்றும் வருகின்றது. எது எவ்வாறாயினும் இந்த பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வரபிரசாங்களும் கிடைக்க என்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.