ஆசிரியர் உதவியாளர்களுக்கான 4ஆயிரம் அதிகரிப்பு: பெப்ரவரி முதல் நிலுவையுடன் வழங்கவும் நடவடிக்கை

ஆசிரிய உதவியாளர்களுக்கான 4000 ரூபா அதிகரிப்பு இம்மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கான நிலுவை பணமும் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துடன், இதற்கான சுற்று நிருபங்கள் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆசிரியர் உதவியாளர்களுக்கு மேலதிகமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 4000 ரூபா தொடர்பில் பல்வேறு இழுபறிநிலை ஏற்பட்டபோதிலும் என்னுடைய தொடர்ச்சியான அலுத்தத்தின் காரணமாக அண்மையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் நேற்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி கையொப்பமிட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாத நிலுவையுடன் இந்த அதிகரிப்பு தொகை வழங்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இந்த ஆசிரிய உதவியாளர்களுக்கானக் கொடுப்பனவு அதிகரிப்புத் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த பொழுதிலும் அவற்றை பொருட்படுத்தாது நான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதனைக் கருதுகின்றேன்.

சிலர் இந்த உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்த விதமான நடவடிக்களையும் மேற்கொள்ளாமல் இவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்தினார்கள். அதனால் பாதிக்கபட்டவர்கள் அவர்களே.

ஆசிரியர்

இவர்களுக்கு உள்ள பிரச்சினையும் பயிற்சிகளுக்காக ஆசிரியர் காலசாலைகளில் உள்ளவர்களின் பிரச்சினைகளையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளேன். இவர்களுக்கானப் பயிற்சிகள் முடிந்தவுடன் ஆசிரியர் தரத்திற்கான சம்பள உயர்வு வழங்கப்படும்.

இந்த ஆசிரியர் உதவியாளர்களின் ஓத்துழைப்புடனான கற்பித்தலினால் தற்போது மலையக கல்வி பெறுபேறுகளில் அபிவிருத்தியை காணக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே, இவர்களை ஒரு முழுமையான ஆசிரியர்களாக உருவாக என்னால் ஆன அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இதனை குழப்பி இவர்களைக் கொச்சபடுத்த வேண்டாம். அரசியல் இலாபம் கொண்டு இவர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]