ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு உதவி ஆசிரியர்கள் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு நன்றி

ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்தமைக்கு கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரியர் பயிற்சி பயிலுனர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னனுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கு 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடமையாற்றிய ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்றதுடன் எதிர்வரும் மே மாதம் முதல் 4 ஆயிரம் ரூபா அதிகரிப்போடு 10 ஆயிரம் ரூபா சம்பளத்தை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்த அதிகரிப்பு ஓரளவு சுமைகளை நீக்கும் என்று உதவி ஆசிரியர்கள் கூறியுள்ளார். இந்நிலையில், பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பெருளாதார நெருக்கடி நிலையை உனர்ந்து செயற்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஷ்னனுக்குத் நன்றி தெரிவிப்பதாக கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரியர் பயிற்சி பயிலுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]