ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு

நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

புதன்கிழமை 24.10.2018 அன்று காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் இடம்பெறவுள்ள தெளிவூட்டும் இக்கருத்தரங்கில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளார்.

ஆர்வமுடைய சகல அதிபர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இக்கருத்தரங்கில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகள், கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பான உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கள், ஆசிரியர் – அதிபர் பதவி உயர்வுகளும் சம்பள நிலுவைகளும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் எடுத்தாளப்படவுள்ளன.

மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்குபற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்துப் பயனாளிகளுக்கும் 29 பக்கங்களைக் கொண்ட சம்பள முரண்பாடு தொடர்பான கையேடும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]