ஆசிரியரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது மாணவன் அர்பஜ் என்பவனை ஆசிரியர் ஜெய்ராஜ் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் போலிஸில் புகார் செய்தனர். அதன் பேரில் ஆசிரியர் ஜெய்ராஜ் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த இச்சம்பவமானது, அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]